Author: Muhammadh Irshad
•11:58






இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் கவலை தருகிறது.
இலங்கையன் என்பதில் இந்த ஒரு விடயத்தில் வெட்கித் தலை குனிகிறேன்.
இருப்பினும்,இவற்றை மறக்க முடியாது.

பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 2௦௦ முஸ்லிம்களை விடுதலைப் புலிகளால் சுடப்பட்டார்கள்.
ஒரு கர்ப்பிணி தாயின் வயிறு கிழிக்கப்பட்டு,சிசுவை வெளியே எடுத்து தரையில் அடித்துக் கொன்றார்கள்.
ஈழத்தில் முஸ்லிம்கள் இருக்க கூடாது என்பதற்காக வடக்கு முஸ்லிம்கள் இரவோடு இரவாக விரட்டப்பட்டார்கள்.
முஸ்லிம் வாலிபர்கள் டயர்களில் இட்டு எரிக்கப் பட்டார்கள்.


இதை நியாயப் படுத்த முடியாது.

இஸ்லாமியர்களுக்காக போராடும் இயக்கம்களும்,தமிழர்களுக்காக போராடும் புலிகளும் விடும் தவறு ஒன்றுதான்.தம் இனம் வாழ்ந்தால் போதும் என நினைப்பதுதான்.இப்படி நாமே நினைக்கும் போது,தான் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் சிங்களத்தையும்,அமெரிக்க-யூதர்களையும் எப்படி நாம் குறை கூற முடியும்.?

முஸ்லிம்கள் எப்போதும் புலிகளுக்கு உதவியே வந்தார்கள்.பலர் மறைமுகமாக உதவினார்கள்.இயக்கத்திலும் ஆரம்பத்தில் சேர்ந்தார்கள்.ஆனால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.இதனால் முஸ்லிம்கள் சற்று பயந்தார்கள்.ஆனால் காட்டிக்கொடுக்க வில்லை,சில துரோகிகளை தவிர.பின்னாளில் முஸ்லிம்களை ஈழத்திலிருந்து விரட்டினார்கள்,அறுத்தார்கள்,எரித்தார்கள்.தமிழர்களுக்கு என்ன உரிமை ஈழத்தில் உள்ளதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.
அதனாலேயே முஸ்லிம்கள் விடுதலை போராட்டத்தில் விலகி இருக்க நேர்ந்தது.முஸ்லிம்களையும்,ஒதுக்காது இருந்தால் விடுதலை போராட்டம் என்றோ தன்னிறைவு பெற்று இருக்கும்.

இதற்கிடையில் தமிழர்களும்,முஸ்லிம்களும் தமிழ்தானே பேசினார்கள்.பின் ஏன் ஒதுக்க வேண்டும்? இனம் எனும் வார்த்தை.
இதைத்தானே சிங்களமும் செய்தது.பின் எப்படி நாம் பிழை கூறுவது.தமிழ் மக்கள் பலர் முஸ்லிம் வீடுகளில் தஞ்சம் அடைந்ததை மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள்.ஆனால் சிங்களம் அவர்களை ஒதுக்கியதற்காக ஏன் முஸ்லிம்களை அவர்கள் ஒதுக்க வேண்டும்?

முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானே சிங்களம் கேடு செய்தது.
விடுதலை புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள்.அது சத்திய உண்மை.ஆனால் அவர்கள் செய்த தவறுகள் மிகப்பெரியவை.இதே தவறைத்தான் ஜிஹாத்தை தவறாக விளங்கி இஸ்லாமியர்களுக்காக போராடி ,தீவிரவாதிகள் என பட்டம் சூட்டப்பட்டுள்ளவர்களும் செய்கிறார்கள்.
தாம் வாழ்ந்தால் மட்டும் போதும்.


எனக்கு தமிழ் நண்பர்கள்தான் அதிகம்.தயவு செய்து தவறாக புரியாதே நண்பா.

share ur feelings nanbargale.
|
This entry was posted on 11:58 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: