Author: Muhammadh Irshad
•06:57
feeling not well after leaving Home.
missing friends,family & Kalmunai
Author: Muhammadh Irshad
•06:56
Ellorum onre purinchikkenum.ltte ai alichchathukkaaga uno le problem ille.tamil makkala alichchethukkaaga.ltte ai alichchathukku enra kanna moodi support pannelaam.bcoz,1990 kalil nam muslimkalai avvelavu kodumai paduththinaaga.but,ithu tamil alinthathukku.so tamil makkalai aliththathukku naam support pannuvathu sariya? tamil makkalai aliththathukku muslimgal aatharavu thanthaal ,athu sariya? .muslim-tamil uravai kuleppe singalavargalin thoonduthal ithu.naalai tamilargal eppedi nammai paarppaargal?. ltte enraal ethrippom.tmil makkal enaraal support pannuvom.must see the channel 4 videos.
Author: Muhammadh Irshad
•06:55

Just travelled in our new Mitsubishi montero sport.
It's fantastic.
Amazing
Author: Muhammadh Irshad
•00:11
After watching channel 4,feel shy that I'm Sri lankan.
Dear friends of tamil,great sorry as Sri lankan.we know the pain.we have felt it due to LTTE.this sorry is not value than the souls.strongly believe that the present govermnet 
would be punished.Due to goverment,don't hate us.we are also tamil following Islam.
Author: Muhammadh Irshad
•02:57
இன்று இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடுகள் உள்ளன.அது தமிழ் மக்கள் அநியாயாமாக கொல்லப்பட்டமை தொடர்பிலாகும்.அது விடுதலை புலிகளை கொன்றது பற்றி அல்ல.தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்காக என்றால் அதை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.ஆனால் புலிகள் அழிக்கப்பட்டமை பற்றி என்றால் சத்தியமாக எதிர்க்கிறேன்.அதற்காக இலங்கை அரசை ஆதரிப்பாதாக அர்த்தம் அல்ல.அரசாங்கம் செய்தது காட்டுமிராண்டித் தனம்.அதற்கு அரசாங்கம்,இராணுவம்தான் பொறுப்பு.இலங்கை மக்கள் அல்ல.தமிழ் நண்பர்கள் கோபிக்கக் கூடாது.புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பது உண்மை.ஆனால்,பாசிசத்தை நம்பினார்கள்,சுயநலம் கொண்டு தமிழ் தலைவர்களையும் அழித்தார்கள். முஸ்லிம்களை அநியாயம் செய்தார்கள்.அங்கே அவர்களது போராட்டம் மாசுபட்டது.அங்குதான் அவர்களது அழிவு ஆரம்பமானது.

புலிகள் முஸ்லிம்களுக்கு செய்தவற்றையும் கொஞ்சம் பாரு நண்பா.
Channel 4காட்டாத புலிகளின் குற்றம்களில் சில.
மனச்சாட்சியுடன் பார்த்து Command செய்யுங்கள்.
Author: Muhammadh Irshad
•11:58






இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் கவலை தருகிறது.
இலங்கையன் என்பதில் இந்த ஒரு விடயத்தில் வெட்கித் தலை குனிகிறேன்.
இருப்பினும்,இவற்றை மறக்க முடியாது.

பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 2௦௦ முஸ்லிம்களை விடுதலைப் புலிகளால் சுடப்பட்டார்கள்.
ஒரு கர்ப்பிணி தாயின் வயிறு கிழிக்கப்பட்டு,சிசுவை வெளியே எடுத்து தரையில் அடித்துக் கொன்றார்கள்.
ஈழத்தில் முஸ்லிம்கள் இருக்க கூடாது என்பதற்காக வடக்கு முஸ்லிம்கள் இரவோடு இரவாக விரட்டப்பட்டார்கள்.
முஸ்லிம் வாலிபர்கள் டயர்களில் இட்டு எரிக்கப் பட்டார்கள்.


இதை நியாயப் படுத்த முடியாது.

இஸ்லாமியர்களுக்காக போராடும் இயக்கம்களும்,தமிழர்களுக்காக போராடும் புலிகளும் விடும் தவறு ஒன்றுதான்.தம் இனம் வாழ்ந்தால் போதும் என நினைப்பதுதான்.இப்படி நாமே நினைக்கும் போது,தான் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் சிங்களத்தையும்,அமெரிக்க-யூதர்களையும் எப்படி நாம் குறை கூற முடியும்.?

முஸ்லிம்கள் எப்போதும் புலிகளுக்கு உதவியே வந்தார்கள்.பலர் மறைமுகமாக உதவினார்கள்.இயக்கத்திலும் ஆரம்பத்தில் சேர்ந்தார்கள்.ஆனால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.இதனால் முஸ்லிம்கள் சற்று பயந்தார்கள்.ஆனால் காட்டிக்கொடுக்க வில்லை,சில துரோகிகளை தவிர.பின்னாளில் முஸ்லிம்களை ஈழத்திலிருந்து விரட்டினார்கள்,அறுத்தார்கள்,எரித்தார்கள்.தமிழர்களுக்கு என்ன உரிமை ஈழத்தில் உள்ளதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.
அதனாலேயே முஸ்லிம்கள் விடுதலை போராட்டத்தில் விலகி இருக்க நேர்ந்தது.முஸ்லிம்களையும்,ஒதுக்காது இருந்தால் விடுதலை போராட்டம் என்றோ தன்னிறைவு பெற்று இருக்கும்.

இதற்கிடையில் தமிழர்களும்,முஸ்லிம்களும் தமிழ்தானே பேசினார்கள்.பின் ஏன் ஒதுக்க வேண்டும்? இனம் எனும் வார்த்தை.
இதைத்தானே சிங்களமும் செய்தது.பின் எப்படி நாம் பிழை கூறுவது.தமிழ் மக்கள் பலர் முஸ்லிம் வீடுகளில் தஞ்சம் அடைந்ததை மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள்.ஆனால் சிங்களம் அவர்களை ஒதுக்கியதற்காக ஏன் முஸ்லிம்களை அவர்கள் ஒதுக்க வேண்டும்?

முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானே சிங்களம் கேடு செய்தது.
விடுதலை புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள்.அது சத்திய உண்மை.ஆனால் அவர்கள் செய்த தவறுகள் மிகப்பெரியவை.இதே தவறைத்தான் ஜிஹாத்தை தவறாக விளங்கி இஸ்லாமியர்களுக்காக போராடி ,தீவிரவாதிகள் என பட்டம் சூட்டப்பட்டுள்ளவர்களும் செய்கிறார்கள்.
தாம் வாழ்ந்தால் மட்டும் போதும்.


எனக்கு தமிழ் நண்பர்கள்தான் அதிகம்.தயவு செய்து தவறாக புரியாதே நண்பா.

share ur feelings nanbargale.